முல்லைத்தீவு மூன்றாம் கட்டை சந்தி பகுதியில் இன்று இரவு 8மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கேப்பாபிலவு மாதிரிக்கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை விஜயகுமார் (வயது 32)என்னும் இளம் குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளகியதாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை போலீசார் மேற்கொண்டுள்ளனர் .
சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .