சுகாதார பாதுகாப்புடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் பெற்றோர் தேவையற்ற அச்சம் அடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் சிறுவர் பாதுகாப்பு விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சு பொறுப்புடன் செயற்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் தேவையான சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேல் மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வேறு மாகாண பாடசாலைகளில் பணியாற்றுவதென்றால், அவர்களை அழைப்பதா இல்லையா என்பது தொடர்பில் அதிபரே தீர்மானிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
|