இன்று 12.01.2021 இன்று மதியம் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
வவுனியா பட்டாணிச்சூர், பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, ஹொரவபொத்தன வீதி முடக்கப்பட்டு, அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் நேற்று வரை 124 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
இதில் சனிக்கிழமை (09) மில் வீதியில் மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் என நான்கு பேருக்கு இன்று மதியம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியாவில் தற்போதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.