கல்யாணத்துக்கு முன் விரட்டி விரட்டி காதலித்த வாலிபர் அதே மனைவியை விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சேத்தியாதோப்பு ஆணைவாரி நல்லதண்ணிகுளத்தைச் சேர்ந்தவர் மீன்வியாபாரி சஞ்சய்காந்தி. கடந்த பத்து வருடத்திற்கு முன்பு பேருந்தில் நடத்துனராக இருந்தபோது அதே பேருந்தில் பயணித்து சத்தியவதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் குடும்ப சூழ்நிலையால் பேருந்து நடத்துனர் வேலையை விட்டு மீன் வியாபாரத்திற்கு மாறினார் சஞ்சய் காந்தி. இந்த நிலையில் தனது காதல் மனைவி மீது தினமும் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் சஞ்சய். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சத்யவதி குழந்தைகளோடு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து சத்தியவதியை தன்னுடன் வந்து மீண்டும் வாழும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு சத்யவதி மறுத்ததால் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் அருவாளால் சத்தியவதியை வெட்டியுள்ளார் இதில் அவரது கை துண்டானது. அதன் பிறகு பயந்து போன சஞ்சய் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சத்தியவதியை மீட்ட அருகில் இருந்தவர்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த விருதாச்சல போலீசார் சஞ்சய் காந்தியை கைது செய்தனர். |
|
< |