ரசிகர்களை, ரசிகைகளை, குடும்பத்தினரை, உறவினரை மீளாத்துயரில் ஆழ்த்தி சென்றுள்ளார் நடிகை சித்ரா. சென்னை நசரத்பேட்டையில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இரவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் ஹேம் நாத் என்பவருடன் தங்கியிருந்தாக கூறப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
போலிசில் புகார் அளிக்கப்பட்டு பின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சித்ரா கொலை செய்யப்பட்டாரா எந்த சந்தேகத்திற்கு இடையில் அவர் தற்கொலை தான் செய்துகொண்டுள்ளார். முகத்தில் இருந்த கீரல்கள் அவரின் நகம் பட்டதால் வந்தது என மருத்துவ அறிக்கை வெளியானது.
இருந்த போதிலும் அவரின் தற்கொலைக்கு காரணம் என்ன என தொடர் விசாரணை பல கோணங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரின் உடல் கோட்டூர் புரத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொது மக்கள், நடிகர்கள், நடிகைகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நடிகை சித்ராவின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.