இந்திய நிறுவனமொன்றினால் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு, குறித்த தடுப்பூசி இந்திய மத்திய ஒளடத ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும், Bharat Biotech என்ற நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவையுடன் இணைந்து குறித்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.இதன்படி, அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி குறித்த தடுப்பூசி இந்திய மத்திய ஒளடத ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
Covaxin என பெயரிடப்பட்டுள்ள குறித்த தடுப்பூசி, தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், குறித்த தடுப்பூசி, இந்தியாவின் 18 பகுதிகளில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன்படி, தமது தடுப்பூசியானது, பாதுகாப்பு மற்றும் பயனுள்ளது என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அதனை அவசரப் பயன்பாட்டுக்காக வழங்க முடியும் என Bharat Biotech நிறுவனம் தெரிவிக்கின்றது.
எனினும், பரிசோதனைகள் மற்றும் பகுப்பாய்வுத் தரவுகள் நிறைவடைந்ததன் பின்னரே, இறுதிக்கட்ட அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.