அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும், தொடரைக் கைப்பற்றியதால், அந்த கோப்பையை கோஹ்லி, நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்துள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், தொடரைக் கைப்பற்றிய இந்தியா அசத்தியது.
இதனால் வெற்றிக்கான கோப்பையை கோஹ்லி வாங்கிய பின்னர், அணியினரால் அது நடராஜன் கையில் கொடுக்கப்பட்டது. அதே போன்று ஹார்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. அந்த விருதை ஹார்திக் நடராஜன் கையில் கொடுத்து அழகு பார்த்தார். இந்த இரண்டு கோப்பையுடனுடம் நடராஜன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.