உப்பு நீரைக் குடிக்கும் பழக்கம் மிகவும் நல்லது. ஆய்வு ஒன்றில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து ஒரு வாரம் குடிப்பதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை கிடைப்பதோடு, உடல் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வாரம் இந்த நல்ல பழக்கத்தை மேற்கொண்டால், நிச்சயம் நல்ல முடிவைப் பெறலாம்.
வெதுவெதுப்பான உப்பு நீர் உடலுக்கு நன்மைகளை அளிக்கக்கூடியது என்பது தெரியும். இருப்பினும், அனைவரும் இதன் நன்மைகளை நம்பாமல், இது ஒரு கட்டுக்கதையாக நினைத்து பின்பற்றாமல் இருக்கின்றனர். ஆனால் சில ஆராய்ச்சிகள், இந்த எண்ணத்தை உடைத்து வெதுவெதுப்பான உப்பு நீர் உடல் ஆரோக்கியத்தை நிர்வகிக்கக்கூடியது என்பதை நிரூபித்துள்ளன.
வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பது எப்படி? உங்களுக்கு இந்த பழக்கம் இல்லாமல் இருந்தால், உப்பு நீரை சரியான வழியில் பருகுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். சில ஆய்வுகளில் இரவு தூங்கும் முன்வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பதற்கான சிறந்த நேரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குடிப்பதால் உகந்த நன்மைகள் கிடைப்பதோடு, உடலின் வளர்சி மாற்றத்திற்கும் உகந்ததாக செயல்படும். இதனால் தான் பலர் இரவு நேரத்தில் குடிக்க தேர்வு செய்கிறார்கள்.
இப்போது ஒரு வாரம் தொடர்ந்து வெதுவெதுப்பான உப்பு நீரை இரவு தூங்கும் முன் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம். உடல் வறட்சி தடுக்கப்படும் உப்பு நீர் குடிப்பதன் முக்கிய நன்மைகளுள் ஒன்று, இது உடலுக்கு தேவையான நீரேற்றத்திற்கு உதவி புரிந்து, உடல் வறட்சியைத் தடுக்கிறது. மனித உடல் பெரும்பாலும் நீரைக் கொண்டுள்ளது. எனவே உடல் வறட்சியடையாமல் இருக்க அதிக நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். ஊட்டச்சத்துக்களை வழங்கும் வெதுவெதுப்பான உப்பு நீரில் உடலுக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. எனவே உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் மற்றொரு சிறந்த வழியாக இது விளங்கும். கூடுதலாக, இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, நோய்த்தொற்றுக்கள் உடலைத் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்கவும் செய்யும். செரிமானம் மேம்படும் ஒரு வாரம் தொடர்ந்து வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடித்து வந்தால் பெறும் நன்மைகளுள் முக்கியமானது, செரிமான இயக்கம் மேம்படும். செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட்டு வந்தால், அடிக்கடி சந்திக்கும் செரிமான பிரச்சனைகளான அஜீரண கோளாறு, மலச்சிக்கல், உப்புசம் போன்றவை தடுக்கப்படும். மெட்டபாலிசம் மேம்படும் ஒரு சிறப்பான உடல் வளர்சிதை மாற்ற முறையை வழங்குவதற்கு உப்பு நீர் உதவி புரியும்.
எனவே, இது நாம் உண்ணும் உணவை உடலுக்கு தேவையான ஆற்றலாக திறம்பட மாற்றும். மன அழுத்தத்தைக் குறைக்கும் உப்பு நீர் ஒரு சிறந்த மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பானமாக நம்பப்படுகிறது. முக்கியமாக நாள் முழுவதும் கடுமையாக உழைத்த பின் இரவு நேரத்தில் உப்பு நீரைக் குடிக்கும் போது, அது மனதை அமைதியடையச் செய்வதோடு, புத்துணர்ச்சியையும் பெறச் செய்யும். நல்ல தூக்கம் கிடைக்கும் எப்போது உடல் நன்கு ரிலாக்ஸாகவும், மனம் நேர்மறையாகவும் இருக்கிறதோ, அப்போது நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அப்படி தான், இரவு நேரம் உப்பு நீரைக் குடித்து விட்டு தூங்கும் போது, மனதில் உள்ள அழுத்தம் குறைந்து, மனம் அமைதி பெற்று நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறச் செய்கிறது. உள்காயம் சரியாகும் உப்பில் உள்ள கனிமப் பொருட்கள், உடலினுள் உள்ள காயங்களைத் தவிர்க்க உதவும். எனவே உப்பு கலந்த நீரைக் குடிக்கும் போது, அது ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக உடலினுள் செயல்பட்டு, உடல் வலி மற்றும் அது சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்க செய்கிறது. ஆர்த்ரிடிஸைத் தடுக்கும் வெதுவெதுப்பான
உப்பு நீரைக் குடிப்பதால் பெறும் ஒரு முக்கியமான நன்மை, இன்று பலரும் அவஸ்தைப்படும் ஆர்த்ரிடிஸ் அபாயத்தைத் தடுக்கிறது. உப்பு நீர் மூட்டுக்களில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதுடன், வீக்கத்தையும் குறைக்கிறது. எனவே ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் உப்பு நீரைக் குடிப்பது மிகவும் நல்லது. உடல் சுத்தமாகும் உப்பு நீர் உடலை சுத்தம் செய்யும் ஒரு அற்புத பானம் எனலாம். உப்பு நீரைக் குடிக்கும் போது, அது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, உடலை சுத்தமாக்கும். எனவே நீங்கள் உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், மாதம் ஒரு முறை ஒரு வாரத்திற்கு உப்பு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான சருமம் உப்பு நீரின் மற்றொரு அற்புதமான நன்மை, அது சருமத்தை மென்மையாக பட்டுப் போட்டு பராமரிக்க உதவும். ஏனெனில் பொதுவாக உடலில் போதுமான அளவு நீர் இருந்தால், சருமம் வறட்சியின்றி அழகாக காணப்படும். எனவே உப்பு நீரைக் குடிக்கும் போது, அது சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சருமத்தை பிரகாசமாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும். ஆரோக்கியமான எலும்பு உப்பில் உள்ள கனிமச்சத்து எலும்புகளின் நிலையை வலுவாக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, எலும்புகளை வலிமையாக்கும். முக்கியமாக இது முதுமைக் காலத்தில் சந்திக்கும் ஆஸ்டியோபோரோசிஸைத் தவிர்க்க உதவி புரியும்.
நினைவில் கொள்ள வேண்டியவை: என்ன தான் உப்பு நீர் குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவித்தாலும், அதனாலும் சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க, ஒருசில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். அவையாவன: * அளவுக்கு அதிகமாக உப்பை நீரில் கலந்து விட வேண்டாம். அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உப்பு நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். * டேபிள் உப்பிற்கு பதிலாக இயற்கை உப்பை பயன்படுத்தவும். டேபிள் உப்பில் பெரும்பாலும் பதப்படுத்தும் பொருட்கள் இருப்பதால், அவை ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவையாக இருக்கலாம். ஒருவேளை உப்பு நீரால் குமட்டல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையை அனுபவித்தால், உடனே உப்பு நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். * முக்கியமாக உப்பு காரணமாக கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், உப்பு நீர் குடிக்கக்கூடாது.