வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கனகராயங்குளம் கிராமத்தில் A9 வீதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குறிய உணவகமான தாவூத் உணவகத்தையும் அக்காணியையும் விட்டு விலகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது
நீண்டகாலமாக சர்ச்சைக்குள் இருக்கும் இந்த விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது
வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில் A9 வீதியில் அமைந்துள்ளது தாவூத் உணவகம் குறித்த உணவகம் அமைந்துள்ள நிலப்பரப்பானது முன்னால் போராளி ஒருவருக்கு சொந்தமானது குறித்த போராளி புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த காலப்பகுதியில் தாவூத் நஜீப் என்பவரால் அடாத்தாக பிடிக்கப்பட்டு உணவகம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது
குறித்த முன்னால் போராளி புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைந்த பின்பு குறித்த காணியை மீளவும் தருமாறு கேட்டுக்கொள்ளவும் உணவகத்தின் உரிமையாளருக்கு இருந்த அரசியல் செல்வாக்கினாலும் பண பலத்தாலும் அடாத்தாக காணியை அபகரித்துள்ளார் என்றும் குற்றம் சுமத்தியிருந்தார் காணியின் உரிமையாளரான முன்னால் போராளி
இதே நேரத்தில் நீதி கேட்டு அழைந்து திரிந்த முன்னால் போராளி மீதும் அவரது குடும்பத்தார் மீதும் கனகராயன்குளம் பொலிஸார் தாவூத்துடன் இணைந்து தாக்குதல் நாடாத்தி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர் அந்நேரத்தில் கனகராயன்குளம் கிராம மக்கள் பாரிய ஓர் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆதரவாக நடாத்தியிருந்தனர்
தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆனைக்குழு ,நீதிமன்றம் என நீதி வேண்டி அனைத்து தரப்பினரிடமும் சென்றும் எந்த பலனும் கிடைக்காத நிலையில் நீதிமன்றில் வழக்கு நிலுவையிலும் உள்ளது
குறித்த உணவகத்தின் மின் இணைப்பு போராளியின் பெயரிலேயே உள்ளது உணவகத்தின் மின்சார கட்டணம் 2இலட்சத்தை தாண்டியும் மின்சார சபை அதனை துண்டிக்காமல் இருக்கவும் கிளிநொச்சியில் உள்ள மின்சார சபைக்கு இது தொடர்பாக காணி உரிமையாளர் அறிவித்தல் கொடுத்து மின் இணைப்பு துண்டிக்குமாறு கடிதம் வழங்கியிருந்தார் ஆனாலும் அக்கடிதம் வழங்கப்பட்டு ஓரிரு வாரங்களில் உணவகத்தின் மின் இணைப்பு தாவூத்தின் பெயரில் மாற்றப்பட்டது உரிமையாளரின் அனுமதி இன்றி காரணம் அங்கு மின்சார சபையில் பிரதான அதிகாரியாக இருந்தவர் ஒரு முஸ்லிம் நபர் எனவும் பாதிக்கப்பட்ட போராளி தெரிவித்தார்
சட்டமும், திணைக்களங்களும் எந்த தீர்வும் தரப்போவதில்லை என்று மனம் சோர்ந்திருந்த குடும்பத்தினருக்கு ஆறுதலாக கிடைத்தது ஒரு செய்தி கடந்த 21 ஏப்ரல் குண்டு தாக்குதலின் போது நாடு முழுவதும் சந்தேகத்திற்கிடாமான முஸ்லிம்களின் இருப்பிடங்கள் பாதுகாப்பு பிரிவினரால் சோதனை செய்யப்பட்டது அந்நேரத்தில் தாவூத் உணவகமும் பரசோதனைக்குட்பட்ட நேரத்தில் அங்கு துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டு உணவக உரிமையாளரான தாவூத் கைது செய்யப்பட்டார்
பல மாதங்களின் பின் பிணையில் விடுதலையான தாவூத் மனதில் நயவஞ்சகத்தை வைத்துக்கொண்டு குறித்த போராளியை பலிவாங்க துடித்து போராளியின் காணியில் ஹெராயின் போதைப்பொருளை வைத்து தனது நண்பர்களான பொரிஸாருக்கு அறிவித்து போராளியை கைது செய்ய வைத்ததாகவும் போராளி தற்போது சிறையில் என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்
இந்த வேளையில் தான் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு திறமையான இரு பிரதான உத்தியோகத்தர்கள் பதவியேற்றிருந்தனர் பிரதேச செயலாளராக பிரதாபன் அவர்களும் உதவி பிரதேச செயலாளராக தர்மேந்திரா அவர்களும் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றி வரும் நிலையில் குறித்த உணவகத்தின் காணி பிணக்கு தொடர்பான விசாரனை கோவையை தூசு தட்டினார்கள் எனவே இலங்கை சட்டத்தின்படி சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களை வெளியேற்றும் சட்டத்தின் படிவம் “அ” பதாதையை நேற்றைய தினம் உணவகத்தில் காட்சிபடுத்துள்ளனர் குறித்த பதாதையில் எதிர்வரும் 8.7.2020 ற்கு முன்னராக குறித்த உணவகத்தை நாடாத்தும் தாவூத் நஜீப் என்பவர் இக்காணியை விட்டு வெளியேற வேண்டும் என்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதேவேளை தாவூத் தனது உணவகத்திற்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தருமாறு உதவிபிரதேச செயலாளரிடம் கோரியிருந்த நிலையில் அன்றைய தினம் இருந்த சடத்தினிமித்தம் அதை வழங்க முடியாது என்று உதவி பிரதேச செயலாளர் தெரிவிக்கவும் அவரது கடமையை சரியாக செய்யவிடாது தடுத்ததுடன் அச்சுறுத்தல் விடுத்திராந்தார் தொடர்ந்து பொலிஸாரிடம் இது தொடர்பாக மாவட்ட செயலகம் முறையிட்டு தாவூத்தை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தயிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
குறித்த துணிகரமான அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அக்காணியை மீட்டு பாதிக்கப்பட்ட போராளி குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் மக்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்
இது தொடர்பான கடந்த கால எமது செய்தி தொகுப்புக்கள் இதோ…
தொடர்ந்தும் எமது செய்தி சேவை இந்த விடயத்தை கவணத்தில் எடுத்த வண்ணமே இருக்கும்
வவுனியா தாவூத் ஹோட்டல் நடத்துனர் பொலிஸாருடன் சேர்ந்து தமிழ் குடும்பம் மீது கண்மூடிதனமான தாக்குதல்!
வவுனியா கனகராயன்குளம் சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் – கைதாகியுள்ள முன்னால் போராளி!
வவுனியாவில் வெடிபொருட்களுடன் கைதான தாவூத் உரிமையாளருடன் சொகுசாக உறவாடின பொலிஸார்!
நெடுங்கேணி உதவி பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த தாவூத் உரிமையாளர்!