மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் தொடர்ந்து பல அதிர்ச்சியூட்டும் மரணங்கள் நிகழ்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வைத்தியசாலையில் பல நபர்களின் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதில் குறிப்பிடுபவை ஓசானம் சமுக சேவை நிலையத்தின் பொறுப்பாளரான அருட்தந்தை செற்றிக் ஜீட் ஒக்ஸ் மரணம் அடுத்து மகிழடித்தீவு தாய் சேய் மரணம் ஆகும்
பின் களுதாவளை ஆசிரியை மரணம் அதன்பின் வந்தாறுமூலை சிறுவன் மரணம் மற்றும் களுவாஞ்சிக்குடி குழந்தை மரணம் அடுத்தடுத்து நிகழ்ந்தது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அடுத்து தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு மருத்துவ கொலை அரங்கேறியுள்ளது.மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த ஜசோதா எனும் பெண் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் தோல்வியில் முடிந்ததால் மரணம் அடைந்துள்ளார்.
மேலும் தாயுடன் சேர்ந்து சிசுவும் மரணமடைந்துள்ளதாக வெளியான செய்தி பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழரின் சனத்தொகை வீழ்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்கின்றது மட்டக்களப்பு வைத்தியசாலை!!!!
கிழக்கில் தமிழினத்தின் வீழ்ச்சி 6% வீதத்தால் வீழ்ச்சியடைந்து முதலாம் நிலையில் சனத்தொகையில் இருந்த நாம் 3ம் இடத்தில் தள்ளப்பட்டுள்ளோம் ,
இன்னும் பத்துவருடம் சென்றால் கிழக்கில் தமிழர் வசித்தார்களா???என ஆச்சரியத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை பாகிஸ்தானில் தேடுவது போன்று தேடியழைய வேண்டிவரும்.
30 ஆண்டு யுத்தத்தின் பாதிப்பு இப்பொழுது 2009 ஆண்டு பின் தற்போதுவரை இராணுவ நடவடிக்கையின் போது ஏற்பட்ட உயிரிழப்பை விட இளம்பாராயத்தினர் தற்கொலை ,இதைவிட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்படும் தாய்சேய் மரணங்கள் ,அதே போல் சிசு பிறப்பு வீதத்தை ஊக்குவிக்கின்ற தமிழ்கிராமங்களில் கர்ப்பணி தாய்மாரை வழிநடத்த வேண்டிய சுகதார வைத்தியதிகாரி அலுவலகங்கங்கள் அதில் கடமை புரிந்து ஒவ்வொரு கர்ப்பணி தாய் சுகநலனை தொடர்ந்து அவதானிக்கும் பொறுப்புமிக்க குடும்ப நலன் உத்தியோகத்தர்கள் இவர்கள் விழிப்புணர்வு சமுகப்பற்றோடு கொடுப்பதில்லை ,இதனால் ஒரு புறம் கர்ப்பணி தாய்மார் பிரசவ காலம் நெருங்க முதலே அறுவை சிகிச்சை பிரசவித்தல் இதன் மூலம் பல உயிர்கள் இழக்கின்றோம்.மறுபக்கம் பணத்திற்காக கருக்கலைப்பை ஊக்குவிக்கும் சட்டபுரம்பான வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் .இதை விட பிள்ளை பிறந்து 6மாதத்திற்குள்ளே தாய்ப்பாலை முறையாக கொடுக்க தெரியாமல் புரையேறி மரணமாகும் சிசுக்கள் இப்படி திரிசங்கடமான ஆபத்து நிறைந்த நிலையில் கிழக்கில் தமிழரின் வீழ்ச்சியை கொண்டு செல்கின்றது .
இன்றைய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு தாய்சேய் மரணம் கடந்த ஆண்டு மகிழடித்தீவு கிராம தாய்சேய் மரணங்கள் தமிழரின் வீழ்ச்சியை சரி பண்ணுவதற்கு எந்த ஒரு வழிவகையும் இல்லாமல்
இதை இன்னும் ஊக்குவிக்கின்றது.