பாவனையில் இல்லாத தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் வானொலி அலைவரிசைகள் என்பன அரசுடைமையாக்கப்படும் என்ற உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்துள்ளார் என பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்தார்.
அண்மையில் ஊடகங்களின் தலைவர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதுபற்றி அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்தார்.
ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது இடையிடையே வேறு தொலைக்காட்சி அலைவரிசைகள் குறுக்கிடுவதை தடுப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையால் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அது தவறான கருத்தாகும்.
இதன் மூலம் எக்காரணத்தைக் கொண்டும் ஊடக சுதந்திரம் பறிக்கப்படாது என பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன இதன்போது தெரிவித்தார்.