ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ கட்சிகளுக்கான ஒன்றுகூடல் இன்று மாலை இரண்டு மணியளவில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற உள்ளதாகா அறியப்படுகிறது
இவ்வொன்றுகூடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளான ஈழ மக்கள் ஜனனாயக கட்சி(EPDP),சிறி ரெலோ,ஜனனாயக மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் கட்சிகளும் கலந்துகொள்ள உள்ளதாக கொழும்பில் உள்ள உங்கள் tnn செய்தியாளர் தெரிவித்துள்ளார்