ஊர்காவற்துறை நாரந்தனை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் உள்ள கிணற்றில் வீழ்ந்து 7 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை குறித்த சிறுமி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குழந்தையின் சடலம் தற்போது ஊர்காவற்துறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதபரிசோதனையும் இடம்பெறவுள்ளது.