காத்தான்குடி கர்பலா பகுதியில் பெண் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்களான பொலிஸ் புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24.04.2016 அன்று இரவு காத்தான்குடி கர்பலா பகுதியில் 38 வயது பெண்மணியை துஸ்பிரயோகம் செய்பட்ட நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்று இரவு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பின்னார் வைத்தியசாலையில் மேற்கொண்ட பொலிஸ் விசாரணைக்கு அமைவாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டு மே 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.