மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஐந்துகோவிலானை ஆதரித்து சீமான் வாக்கு சேகரித்தார்.
அப்போது, உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமான 58 கிராம கால்வாய் திட்டம் 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார் சீமான்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயம் அரசு வேலையாக்கப்படும் என்றும், இலவச கல்வி, இலவச குடிநீர் வழங்கப்படும் என்றும், தெரிவித்தார்.
மேலும், ஜல்லிகட்டு போட்டி நடத்த உச்சநீதி மன்றம் விதித்த தடை நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாம் ஓட்டு போடாமல் இருந்திருந்தால் ஜெயலலிதா முன்னாள் நடிகையாகவும், கருணாநிதி முன்னாள் வசனகர்த்தாவாகவும் இருந்திருப்பார்கள் என்றும், இவர்கள் 2 லட்சம் பெண்கள் விதவையாக காரணமானவர்கள் என குற்றம்சாட்டினார்.