மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணிபுரம் கிராமத்தில் தமது காணி என அத்துமீறி நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள மக்களை மிரட்டி காணியை விட்டு வெளியே செல்லுமாறு கோரியதற்கிணங்க பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர்.
இது தொடர்பாக குறித்த பிரதேச மக்கள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த காணி விடயம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடியதுடன், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி வழங்கினார். இதன்போது எறாவூர் பொலிஸார் சமூகம் அளித்திருந்தனர்.
குறித்த பிரதேத்தில் அத்துமீறி மக்களை மிரட்டிய முஸ்லிம்கள் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில்!
அத்துமீறி நுழைந்த முஸ்லிம்கள் இங்குள்ள ஆலயம் மற்றும் மணிபுர கிராமத்திலுள்ள வீடுகளை உடைக்க எங்களிடம் அதிகாரம் உள்ளதாகவும், இதற்கான காணி பத்திரம் உள்ளதாகவும் அதிகார தொணியில் விரட்டியதாக மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் நீங்கள் எங்கு சென்று முறையிட்டாலும் இது எங்களுடைய காணி இங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும், இல்லாவிடின் வீடுகளை பார ஊர்தி கொண்டு அடித்து நொருக்குவோம் எனவும் தெரிவித்தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
காணியில்லா பிரச்சனை முஸ்லிம்களுக்கு இருக்கின்ற போதிலும் கடந்த காலங்களில் தமிழர்களின் காணிகளுக்குள் முஸ்லிம்களின் அத்துமீறல்கள் அதிகரித்த வண்ணமே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் எல்லைக் கிராமங்களில் நடைபெற்று வருகின்றனது.
அந்த வகையில் மீறாவோடை தமிழ் கிராமத்திலும் இவ்வாறான காணி அபகரிப்புக்கள் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாகவும் அதிகாரத்தை கையில் எடுத்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.