விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் என பல கலைஞர்கள் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் 24.மாறுபட்ட கதைக்களத்துடன் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படம் இன்றைக்கு சென்சார் செய்யப்பட இருக்கிறது. இப்படத்தின் சென்சார் ரிசல்ட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.