பல்கலைக்கழக நுழைவு தொடர்பில் தகுதி பெற்றுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணைத்தின் ஊடாக அனுப்பி வைக்குமாறு பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு கோரியுள்ளது.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் பேராசிரியர் பிரியன்த பிரேமகுமார இதனை தெரிவித்திருந்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இரண்டாயிரத்து 208 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.