காத்தான்குடியில் சிறுமியொருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோரின் விளக்கமறியல் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இவர்கள் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி 10 வயதான தமது பிள்ளையை சித்திரவதை செய்த குற்றத்திற்கா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.