மரண தண்டனை விதிக்கப்பட்ட 83 சிறைக் கைதிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக தளர்த்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை தளர்த்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புள்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சிறைக்கைதிகளின் தண்டனைகள், குற்றச் செயல்களின் தன்மை, வழக்கு விசாரணைகள், புனர்வாழ்வளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது.
இதன்படி அந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை,பாலியல் வன்புணர்வு போதைப் பொருள் சார்ந்த குற்றச் செயல்கள் ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு இலங்கையின் நீதித் துறை கட்டமைப்பு இடமளிக்கிறது.
ஆனாலும் 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.