திருகோணமலை -இறக்கக்கண்டி 04ம் வட்டாரத்தில் மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தும் வெடி பொருட்களுடன் ஆண் ஒருவரையும் பெண்யொருவரையும் இன்று (25) மாலை கைது செய்துள்ளதாக குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
குறுத்த 36 வயதுடைய பெண்ணின் வீட்டிலிருந்து டெடனேடர் 81- கோட் வயர் 03 ரோல்-வெடி மருந்து 500கிராம் ஆகியவற்றுடனும் கைது செய்துள்ளதாகவும் கணவர் வெடி பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனைகளை மேற்கொள்ள சென்ற வேளை கணவர் தப்பி ஓடி தலைமரைவாகியுள்ளதாகவும் அதனால் மனைவியரை கைது செய்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மற்றைய 37 வயதுடைய ரசீது நளீம்தீனுடைய வீட்டுலிருந்து டைனமைட் வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக குச்சவௌி பொலிஸார் தெரிவத்தனர்.