முல்லைத்தீவு மாங்குளம் மத்திய மாக வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் கும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…..
இன்று மாலை வேளையில் தனது பேரப்பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரம்பி வந்து கொண்டிருக்கையில் யாழ்ப்பாணம் நோக்கி வந்த கயஸ் வாகனம் மோதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பனிக்கன்குளம் மாங்குளத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான54 வயதுடைய ஆறுமுகம் ஜெயமோகன் என்பவரேயாவார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.