கஜா புயல் மேலும் வழுவடைந்துள்ள நிலையில் அதன் தாக்கம் தற்பொழுது முல்லைத்தீவில் உணரப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வடக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் மேலும் வழுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில் முல்லைத்தீவு கரையோரப்பகுதியில் கஜா புயலின் தாக்கம் தற்பொழுது உணரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் தற்பொழுது மழை பெய்ய ஆரம்பித்துள்ளதுடன் காற்று வேகமாக வீச ஆரம்பித்துள்ளது.மேலும் கடலின் கொந்தளிப்பு அதிகமாகியுள்ளதுடன் கடல் அலையின் உயரம் 4.5 அடிக்கு மேல் உயர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுதல்களுக்கு ஏற்ப செயற்படுமாறு முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்