லகட்டத்தில் காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட அமர்வு, இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறுகின்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த அமர்விற்கு, கரைச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 360 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
குறித்த அமர்வுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்றும் நாளையும் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் காணாமல் போனோர் தொடர்பிலும், நாளை மறுதினம் கண்டாவளையிலும், இறுதிநாளான எதிர்வரும் 28ஆம் திகதி பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் காணாமல் போனோர் தொடர்பிலும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுமென ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள், ஏற்கனவே யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னாரில் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், கிளிநொச்சி விசாரணைகளைத் தொடர்ந்து, வட பகுதியில் உண்மையாகவே காணாமல் போனோர் தொடர்பான எண்ணிக்கையை வழங்க முடியுமென எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.