நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (சனிக்கிழமை) திறந்து வைத்துள்ளார்.
135 அடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலையானது மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட அவர்களின் தனிப்பட்ட நிதி பங்களிப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலைக்கான முதலாவது மலர் பூஜை வழிபாட்டினை மேற்கொண்டு பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி குறிப்பிடுகையில்,
‘பௌத்த சிந்தனையின் அடிப்படையிலேயே இன்று சிறந்ததொரு சமூகத்திற்கான அத்திவாரம் இடப்படுகின்றது. அதன் பெறுமதியை நன்கு உணர்ந்ததன் காரணமாகவே இன்று உலகில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கூட பௌத்த மதத்தை நாடும் நிலைமை உருவாகியுள்ளது.
மதத்தைப் பேணி வாழ்பவர் மதத்தின் மூலம் பாதுகாப்பு பெறுவதாக குறிப்பிடப்படும் புத்தரின் நற்போதனையை சதாவும் நினைவில் நிறுத்தி பௌத்த சிந்தனைக்கு அமைவாக தமது வாழ்வினை சீர்செய்து கொள்ளும் வகையில் நாம் செயற்பட வேண்டும்.’ என்றும் கூறினார்.