அரசாங்கத்தை கவிழ்பதற்காக இன வாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என அமைச்சர் மனோ கணேஷன் கோரியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஜனநாயக ரீதியிலான கருத்துக்களை வெளியிடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் தெற்கில் உள்ளவர்கள், அடிப்படைவாதம், மதவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகிவற்றை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும் அமைச்சர் மனோ கணேஷன் கேட்டுக் கொண்டுள்ளார்.