திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அதிர்ச்சிதான். அதுவும் மார்க்கெட்டின் உச்சததில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாவார்கள்.
நடிகை தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சில இணையதளங்களில் செய்தி வெளியானது. மணமகன் என்ஜினீயராக இருக்கிறார் என்றும் இருவரும் நீண்ட நாட்களாக காதலிப்பதாகவும் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக தமன்னா முடிவு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து கேட்டபோதுதான் தமன்னா அதிர்ச்சி காட்டினார்.
“எனக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் உண்மை இல்லை.
நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். சினிமாவில்தான் என் முழு கவனமும் இருக்கிறது” என்று செய்தியை மறுத்தார் தமன்னா.