இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சென்று அகதிகளாக தங்கியிருக்கும் ஈழத்தமிழர்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம் தாயகம் திரும்பி வருகின்றார்கள்.
அகதி முகாம் பதிவில் இருப்பவர்கள் UNHCR மூலம் எதுவித குற்றப்பண அறவீடும் இன்றி தாயகம் திரும்பிவரும் நிலையில் சுற்றுலா விசாவில் சென்று தமது சொந்த முயற்சியில் வெளிப்பதிவில் தங்கியிருப்பவர்கள் புதிய நடைமுறையால் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாடுபட்டு வருகின்றார்கள்.
சுற்றுலா விசாவில் வந்தவர்கள் விசா முடிந்து தங்கியிருந்த காலத்திற்கு குற்றப்பணம் கட்டவேண்டும் என்ற நடைமுறையே கடந்த 2 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இதன்படி 10 ஆண்டுகள் தமிழகத்தில் தங்கியிருக்கும் ஒருவர் இந்திய மதிப்பில் ஐம்பதாயிரத்திற்கு மேல் குற்றப்பணம் கட்டவேண்டும். அதுவே ஒரு குடும்பத்தில் 5 பேர் என்றால் இரண்டரை லட்சத்திற்கு மேலாகும்.
இந்திய மத்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இப்புதிய திட்டத்தால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இது குறித்து தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் விளைவாக இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
தாயகம் செல்லவிரும்பும் வெளிப்பதிவில் உள்ள ஈழத்தமிழர்கள் கீழ்கண்ட நடைமுறையில் விண்ணப்பித்து குற்றப்பண அறவீட்டில் இருந்து விலக்குபெறவும்.
தேவையான ஆவணங்கள்.
கடவுச்சீட்டு பிரதி (விசா பக்கம் உட்பட)
காவல்துறை பதிவு பிரதி.
சுயவிருப்பத்தின் பேரில் தாயகம் திரும்பும் கடிதம்.
பெறுநர்:
முதன்மை செயலாளர்/
மறுவாழ்வுத்துறை ஆணையாளர்.
மறுவாழ்வுத்துறை செயலகம்
எழிலகம்
சேப்பாக்கம்,
சென்னை-05.
அனுப்புநர்:
(செல்ல விரும்புபவரின் முகவரி)
திகதி:
ஐயா!
………………. ஆகிய நான் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து அகதியாக தங்கியுள்ளேன். …………. காவல் நிலையத்தில் பதிவுசெய்து மேற்படி முகவரியில் வசித்துவருகிறோம். தற்போது இலங்கையில் அமைதி சூழல் நிலவிவருவதால் தாயகம் திரும்பிச்செல்ல விரும்புகிறோம். அதனால் விசா முடிவுகால குற்றப்பண அறவீட்டில் இருந்து விலக்களித்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
(குடும்பத்தில் உள்ளவர்களது பெயர் கடவுச்சீட்டு இலக்கம்)
தொலைபேசி இல:………
-நன்றி-
இப்படிக்கு
(குடும்பத்தலைவர்/செல்பவர்)
மேற்கண்டவாறு சுய விருப்ப கடிதத்தை எழுதி மேற்குறிப்பிட்ட ஆவணப்பிரதிகளையும் சேர்த்து சென்னையில் உள்ள அகதிகள் மறுவாழ்வுத்துறைக்கு தபாலில் அனுப்பிவைக்கவும். நேரிலும் கொடுக்கலாம். தபாலில் அனுப்பினாலே ஏற்றுக்கொள்ளப்படும்.
தபாலில் அனுப்புவர்கள் இந்த முகவரிக்கு அனுப்பவும்.
முதன்மை செயலாளர்/
மறுவாழ்வுத்துறை ஆணையாளர்.
மறுவாழ்வுத்துறை செயலகம்
எழிலகம்
சேப்பாக்கம்,
சென்னை-05.
மறுவாழ்வுத்துறைக்கு அனுப்பிய கடிதம் உள்ளிட்ட ஆவணங்களில் ஒவ்வொரு பிரதியை சென்னையில் உள்ள UNHCR அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். விசா முடிவுகால குற்றப்பணத்தை ரத்து செய்யுமாறு மறுவாழ்வுத்துறையில் கொடுக்கப்பட்ட மனு பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டபின்னர் UNHCR அலுவலகத்திற்கும் அவர்களால் தெரியப்படுத்தப்படும். அதன் பின்னர் UNHCR அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு செல்லவேண்டும். அதன் பின்னர்தான் பயணக்கட்டணம் உள்ளிட்ட சலுகைகள் UNHCR மூலம் வழங்கப்படுகிறது.
UNHCR அலுவலக முகவரி:
இல:11,
17 வது குறுக்குத்தெரு,
பெசன் நகர்,
சென்னை-600090.
தொலைபேசி இல: 04424461734
தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பின் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகிறது.
கடவுச்சீட்டு புதிப்பவர்கள் கவனத்திற்கு.
கடவுச்சீட்டு காலாவதியாகியவர்கள் புதிப்பிப்பதற்கு சென்னையில் உள்ள இலைங்கை துணைத் தூதரகத்திற்கு செல்லும்போது நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல்துறை ஆணையாளர் அலுவலகம் (கொமிசனர் ஒப்பீஸ்) சென்று கடவுச்சீட்டு காலாவதியாகிய காரணத்தால் புதிப்பிப்பதற்காக சன்றுக்கடிதம் வழங்குமாறு மனு எழுதிகொடுத்து அதனடிப்படையில் அவர்களால் வழங்கப்படும் அத்தாட்சி கடிதம் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும்.
இவ்வாறு அத்தாட்சி கடிதம் இல்லாதவிடத்து காவல்துறை பதிவின் மூலப்பிரதியை இலங்கை துணைத் தூதுவராலயத்தில் வாங்கிவிடுவார்கள்.
தேவையான ஆவணங்கள்.
பழைய கடவுச்சீட்டு பிரதி (விசா பக்கம் உட்பட) (இரண்டு)
தேசிய அடையாள அட்டை பிரதி (இரண்டு)
பிறப்பு சான்றிதழ் பிரதி (இரண்டு)
காவல்துறை பதிவு அல்லது அத்தாட்சி கடிதம் மூலப்பிரதி.
கடவுச்சீட்டு அளவு புகைப்படம் (4)
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதுவராலயத்திற்கு செல்பவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டு அதற்குரிய ஆவணங்களை கொண்டு செல்வதன் மூலம் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கலாம்.
04428241896
04428252612
(இடம் லயோலா கல்லூரி அருகில்)
ஸ்டெர்லிங் றோட்
நுங்கம்பாக்கம்
சென்னை.