வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
துரதிர்ஷ்டவசமாக 1990 ஆம் ஆண்டில் வடக்கு முஸ்லிம்களின் மீது முன்னெடுக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை வடக்கு முஸ்லிம் மக்கள் பொறுத்துக் கொண்டு மன்னிக்கின்றார்கள்.
ஆனால், அவர்களுக்கு இழைக்கப்பட்டஅநீதிகளுக்கும் அதனால் ஏற்பட்ட இழப்புக்களுக்கும் உரிய தீர்வைத் தமிழ்மக்களிடமும், அவர்களின் தலைவர்களிடமும் இலங்கை அரசிடமுமே அந்த மக்கள் வேண்டிநிற்கின்றனர்.
வடக்கு மாகாண சபையால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில்முஸ்லிம் சமூகத்தின் ஆலோசனைகள் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன அந்த ஆலோசனைகளிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.