தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக மன்னார் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை(25) காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரை நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
மன்னார் பிரதேசத்தின் பிரதான நீர் விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 25ம்திகதி திங்கட்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரைநீர் மன்னாரில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டு வரும் நீர் வினியோகம் துண்டிக்கப்படும் என பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.