கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மொதுண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் உமையாள்புரம் பகுதியை சேர்ந்த 36 வயதான அற்புதனாதன் அகிலன் என்ற குடும்பஸ்தர் ஆவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
யாழ் நோக்கி பயணித்து கொண்டிருந்த இன்ரசிற்றி புகையிரத்தத்துடன் இன்று பரந்தன் உமையாள் புரம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கமுயன்ற வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாதுகாப்பாற்ற புகையிரத கடவையை 30 மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துவதோடு கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையிகையே பெரும்பாலான புகையிரத விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.