மட்டக்களப்பு- மூதுார் – சேரியபாலம் பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து பெறுமதியான பொருட்களைத் திருடியமை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூதுார் பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனையும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரையும்மே கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.