கூட்டு எதிர்க்கட்சிகளின் சார்பில் நடைபெறவுள்ள மேதினக் கூட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் என்பதற்குப் பதில் திரு.பிரபாகரன் என்று காந்தி கொடிக்கார உளறிக் கொட்டியுள்ளார். அதன் பின்னர் அவர் தன் கருத்தை திருத்திக் கொண்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் காந்தி கொடிக்கார தொடர்ந்தும் கூறியதாவது, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் அனைத்து அரசியல்வாதிகளும் தற்போது தொழிலாளர்களைக் கைவிட்டு விட்டார்கள்.
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பலவந்தமாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஆர். சம்பந்தன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்கின்றார்.
பிரபாகரன் முன்னெடுத்த யுத்தத்தை இன்று சம்பந்தன் முன்னெடுப்பதற்கு மறைமுகமான எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருப்பதை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த இலங்கையருக்கும் பாதிப்பான ஒருவிடயமாகும் என்றும் காந்தி கொடிக்கார தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.