பெரும்பான்மை ஆட்சியே ஜனநாயகம் என்று கூறப்படுகின்ற போது, அது பேரின ஆட்சியாக மாறமுடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய, கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமத்திரன் இதனை தெரிவித்தார்.
அவ்வாறு பேரினவாத ஆட்சியாக மாறினால் அது ஜனநாயகமாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி முறையானது பேரினவாத ஆட்சியாக இல்லாமல் இருக்க வேண்டும் எனின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பில் அதிகாரங்களை பகிர முயற்சிப்பது வட்ட வடிவத்திற்குள் சதுரத்தை புகுத்த முயற்சிப்பதற்கு சமானமான பொருத்துமற்ற செயற்பாடு என அவர் குறிப்பிட்டார்.