இரட்டை சகோதரிகள் இரண்டு பேரை பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் முந்தளம் பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான நபர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட இந்த சிறுமிகள் 14 வயதான இரண்டு பாடசாலை மாணவிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமிகளின் தந்தை இவர்களை கைவிட்டு சென்றுள்ளதுடன், தாய் குறித்த சந்தேக நபருடன் தவறான உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2013 ஆம் ஆண்டில் குறித்த சந்தேக நபர் ஒரு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன், 2014 ஆம் ஆண்டு முதல் மற்றைய சிறுமியையும் இதில் உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமிகள் இருவரும் தனது பாட்டியிடம் தெரிவித்த போதும், இதனை அவர் கண்டு கொள்ளவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் இவர்களின் தாய் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
இதன் பின்னர் சந்தேக நபர் இந்த சிறுமிகளை தொடர்ந்து கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
மீண்டும் இது தொடர்பாக பாட்டியிடம் கூறியுள்ளதுடன், மூவரும் இந்த சம்பவம் தொடர்பாக முந்தளம் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிகள், மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.