தாயகவிடுதலைக்காக தமது உள்ளம் உயிர் உடல் உடமை அனைத்தையும் ஈய்ந்து போராடியவர்கள். முள்ளிவாய்க்கால் போர் ஓய்வின் பின்னர் ஏதுமற்றவர்களாக வாழ்துவரும் இடர்பாடு மிக்க துர்பாக்கிய சூழ்நிலையில் தாயக அரசியல் பரப்பில் எமை ஓரங்கட்டும் நிகழ்சி நிரலில் தமிழரசு கட்சியின் தலைமை வேட்பாளரும் தமிழ்தேசியகூட்டமைப்பின் முதலமைச்சருமான கௌரவ c.v.விக்கினேஸ்வரன் அவர்கள் அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் எமை பெரிதும் விசனத்துக்குள்ளாக்கி இருக்கின்றது.
எமது அமைப்பில் போராடி உயிர்நீத்தவர் போக இறுதியில் கைதாகிய 12000 மேற்பட்டவர்கள் இலங்கை சிறைகளிலும் பின்னரான தடுப்பு முகாம்களிலும் சொல்லண்னாவலிகளையும் துயரங்களையும் சந்தித்திருக்கின்றோம்.
அதனையும் எமது போராளிகள் விடுதலைக்கு செலுத்திய விலையாகவே கருதுகிறோம். ஒரு நாட்டில் யுத்தம் நடைபெறுகின்றபோதான புலனாய்வுத்தகவல் தேவையும் யுத்தம் முடிந்ததன் பின்னரான புலனாய்வுத்தகவல் தேவைக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.
அந்த தேவைகளை போராளிகள் மேற்கொள்ள வேண்டியதேவையில்லை. அதற்கு எப்போதும் போராளிகள் தயாராகுவதுமில்லை. அதற்கு உங்களைப்போன்ற அரசியல்வாதிகளின் தயவு அவர்களுக்கு போதுமானது. கடந்த காலங்களில் அதுதான் நடந்தேறியுள்ளது. போராளிகள் தொடர்பான முதலமைசரின் கருத்துக்கள் தொடர்பில் அது தொடர்பான ஆதாரத்தை முதல்வர் பகிரங்கப்படுத்தவேண்டும்.
அதே போன்று முதல்வர் அங்கம்வகிக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பும் இது தொடர்பில் பதிலளிக்கவேண்டும். போராளிகள் ஒரு இனத்தின் சாதியகுறியீடுகள் அல்லர் அவர்கள் இனத்தின் விடுதலைக்குறியீடுகள் என்பதனை அனைவருக்கும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊடகப்பிரிவு க.துளசி ஜனநாயகபோராளிகள்கட்சி.