கெபலிவத்த ஆலயத்தில் ஆசிர்வாதம் பெற்று கொள்வதற்காக வரும் யாத்ரிகர்களுக்கு புதிய சட்டம் ஒன்றை அமுல்படுத்த நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த சட்டம் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் முயற்சியில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொட்டியாகல ஊடாக மற்றும் அம்பாறை குமன சரணாலயம் ஊடாகவும் உள்ள பிரதான பாதைகள் இரண்டை மற்றும் பயன்படுத்தி எதிர் வரும் நாட்களில் கெபலிவத்த ஆலயத்திற்கு வரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதைகளில் பயணம் மேற்கொள்ளும் போது அனுமதி சீட்டுகளை பெற்று கொள்ள இரண்டு கருமபீடங்கள் அமைக்கப்படவுள்ளது.
டிராக்டர் மூலம் வரும் யாத்ரிகர்களுக்கு 1000 ரூபாவும், ஜீப் வாகனத்தில் வரும் யாத்ரிகர்களுக்கு 2000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.