ஏப்பிரல் 16 ஆம் திகதி கடவத்தை கஹாதுடுவ பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்ட நபரொருவரின் மரணம் கொலை என தெரியவந்துள்ளது.
நேற்று இடம் பெற்ற சடலம் தொடர்பான பிரதேச பரிசோதனையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
35 வயதான குறித்த நபர், சில நபர்களுடன் ஹேரோயின் பயன்படுத்தியுள்ளதுடன், பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக குறித்த நபரின் தலையில் தாக்கி பின்னர் மயக்க நிலையில் உள்ள போது கயிற்றினால் கழுத்தை கட்டி கொலை செய்துள்ளமை பிரதேபரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.