யாழ்ப்பாணம் இந்து கல்லூரியை அண்மித்துள்ள கில்னர் வீதியில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் உந்துருளியில் வந்த இருவர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரியவருகின்றது.
இவர்கள் மீது ஏற்கனவே, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரும் இரு தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.