இலங்கையில் தாதியாகப் பயிற்சி பெறும் இரண்டு வெளிநாட்டு யுவதிகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயற்சி செய்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.
கண்டிப் பொலீசில் மேற்படி வெளிநாட்டு யுவதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
கண்டி வாவிக் கரையில் வைத்து தமது தங்கு மிடம் செல்வதற்கு கடந்த 14ம் திகதி ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு பயிற்சித் தாதிகளான தாம் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியுள்ளனர்.
பாதைகள் பற்றிய சரியான விபரம் தமக்குத் தெரியாத நிலையில் முச்சக்கர வண்டிச் சாரதி ஹந்தானை நான்காம் கட்டைப் பிரதேசத்திற்கு இவர்களை அழைத்துச் சென்று ஊசி மூலம் மயக்கமருந்து ஏற்ற முற்பட்டபோது அவர்கள் தப்பி வந்ததாக தமது முறைப்பாட்டில் தெரிவித்தள்ளனர்.
தம்மிடமிருந்த ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு 8.30 மணியளவில் இவச்சம்பவம் இடம் பெற்றதாகவும் மேற்படி சாரதி பாலியல் நோக்கத்தைஅடையும் வித்தில் முறைகேடாக நடக்க முயற்சித்தததுடன் மறைத்து வைத்திரு;நத மயக்க ஊசி மூலம் தம்மை மயக்கி பல்லுறவில் ஈடபட முயற்சித்ததாதகவும் அவர்கள் முறைப்hடு செய்துள்ளனர்.
கண்டிப் பொலீசார் இது தொடாபாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.