பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக இரட்டை கொலை உட்பட 4 பேரின் மரணத்திற்கு காரணமான துப்பாக்கிதாரி காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
4 பேரை சுட்டுக்கொன்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை பேணியவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகத்திற்குரியவர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று மாலை பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்தறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தள்ளது.
கொழும்பு – ஜம்பட்டாவீதி, ஊருகஸ் சந்தி பிரதேசம் மற்றும் பலப்பிட்டிய நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற 4 கொலைகள் தொடர்பாக அவர் நேற்று முன்தினம் காவல்துறை விசேட படையணியின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.