காலி கராபிட்டிய மருத்துவமனையில் இடம்பெற்ற அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனது குழந்தை இறந்துள்ளதாக வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்காலை மருத்துவமனையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி பிறந்த குழந்தையொன்று மாறு நாள் கராபிட்டிய மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளது.
குழந்தையின் வயிற்றில் அசாதரணமாக குடல் வெளியே இருந்தமையால் இந்த சிகிச்சை இடம்பெற்றுள்ளது.
14 நாட்களான இந்த குழந்தை சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 14 ஆம் திகதி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
தனது குழந்தை இறந்தைமைக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும் இது தொடர்பாக எமது செய்தி பிரிவு கராபிட்டிய மருத்துவமனை பணிப்பாளரிடம் வினவிய போது, இது போன்ற சம்பவம் தொடர்பாக தனக்கு எந்த வித முறைப்பாடும் கிடைக்கப்பெற வில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த குழந்தையின் உடலில் கிருமி தொற்று காரணமாக கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பிறந்த குழந்தைகளின் அவசர சிகிச்சைப்பிரிவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.