பனாமா பேப்பர்களில் வெளியாகியுள்ள இரகசிய ஆவணங்களில் இலங்கையர்களின் கறுப்பு பணம் 10 நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய வேர்ஜின் தீவு, பனாமா, பாமாஸ், சீசெல்ஸ், ஹியு, சேமோவா, பிரிட்டிஷ் ஹெங்குயிலா, கிடேடு, ஹொங்கொங், பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இந்த கறுப்பு பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பனாமா பேப்பர்ஸ் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை, சீசெல்ஸ் மற்றும் பனாமா வழியாக வேறு நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களில் இலங்கையர்கள் தமது கறுப்பு பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.
இவ்வாறு கறுப்பு பணத்தை வைப்பு செய்த 47 இலங்கையர்களின் பெயர்கள் தெரியவந்துள்ளன.
எவ்வாறாயினும் பனாமா பேப்பர்ஸ் இரகசிய ஆவணங்களில் உள்ள வெளிநாடுகளின் தகவல்களை வழங்க பனாமா சட்டமா அதிபர் அனுமதி மறுத்துள்ளார்.
மோசேக் பொன்சேகா நிறுவனம் தமது நிறுவனத்தில் இருந்த இரகசிய ஆவணங்களை அந்த நிறுவனத்தை சேர்ந்த ஜோன் டோ என்பவர் திருடியுள்ளதாக கூறி, நிறுவனம் பனாமா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.