வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று 16.04.2016 தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுனியா சாந்தசோலை பூந்தோட்டத்தில் வசிக்கும் 3பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிவகுமார் (68 வயது) என்பவரே தனது வீட்டில் தூக்கில் தூங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மனைவி யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாவும் இவர் தனிமையில் வீட்டில் வசித்து வருவதாகவும் கிராம சேவையாளர் செல்வராஜா தெரிவித்தார்
சம்பவ இடத்திற்கு இது வரையில் பொலிசார் சமூகமளிக்கவில்லை
சம்பவ இடத்திலிருந்து எமது விசேட நிருபர்