வவுனியா உதைப்பாந்தாட்ட சம்மேளனத்தால் இன்றைய தினம் “PRESIDENT CUP” என்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கவைக்கப்பட்ட போது மைதானத்தில் சற்று குழப்பநிலை இடம்பெற்றுள்ளது
இது பற்றி மேலும் அறியவருவதாவது
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30மணியளவில் முதல் போட்டியாக போட்டி நிரலுக்கமைவாக முதல் போட்டியானது வவுனியா கோல்டன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் எதிர் நியூபைட் விளையாட்டு கழகத்திற்கும் ஆரம்பிக்கப்படவிருந்த வேளை வவுனியா கற்குழி மருதநிலா விளையாட்டு கழகத்தினர் மைதானத்தில் நுழைந்து தமக்கு தீர்வு தருமாறு கோரி கோஷம் எழுப்பினர்
இதேவேளை கோல்டன் ஸ்டார் கழக வீரர்கள் மைதானத்தில் தயராக இருந்த பொழுது இவர்களுடன் மோதவிருந்த நியூபைட் கழக வீரர்கள் மைதானத்திற்கு வெளியில் ஏனைய வீரர்களின் வரவுக்காக காத்திருந்தனர் எனினும் போட்டியின் ஏனைய நடுவர்கள் இல்லாத பட்சத்திலும் போட்டி ஆரம்பமாவதற்கு சில வினாடிகள் இருந்த போதிலும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன தலைவரின் கட்டளைக்கு அமைவாக கோல்டன் ஸ்டார் கழகத்திற்கு வெற்றி என நடுவரால் தீர்மாணிக்கப்பட்டதை ஊடகவியலாளர்களும் அவதாணித்துக் கொண்டிருந்தனர்
இதன் பின் சம்மேளன தலைவருடன் மருதநிலா விளையாட்டு கழகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், காரணம் குறித்த இச் சுற்றுப்போட்டியில் தமது கழகத்தை ஏன் இணைக்கவில்லை என்றும் எதுவித முன்னறிவித்தலும் தமக்கு தரவில்லை என்றுமே வாக்குவாதம் கடுமையாக இடம்பெற்றது எனினும் சம்மேளன தலைவர் எதுவித உறுதியான பதிலும் அளிக்காது மைதானத்தை விட்டு வெளியேறி சென்றார்
இது தொடர்பாக மருதநிலா விளையாட்டு கழகத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிற்கையில்
வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுகழகத்தினரால் வருடாவருடம் நடாத்தப்படும் மின்ணொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இவ்வருட சுற்றுப்போட்டியில் தமது கழகமும் பங்குபற்றியதுடன் இறுதி போட்டிக்கும் தேர்வாகி இருந்த வேளையில் தம்முடன் இறுதி போட்டியில் மோதவிருந்த 786 என்ற கழகத்தினர் அரையிருதி ஆட்டத்தில் வென்றுவிட்டு சுற்றுப்போட்டியை நடாத்திய நிர்வாகத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டதால் குறித்த நிர்வாகத்தினரால் குறித்த கழகத்தை சுற்றுப்போட்டியிலிருந்து விலக்குவதாக அறிவிக்கப்பட்டது
எனினும் குறித்த போடியின் இறுதி போட்டி காலம் கடந்து செல்வதால் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனம் யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்திற்கு விளக்கம் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் மருதநிலா விளையாட்டு கழகத்திற்கும் தமது அறிவித்தல் இல்லாமல் இறுதி போட்டிக்கு விளையாட வேண்டாம் என்றும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது
இதேவேளை குறித்த சுற்றுப்போட்டியின் விதிகளுக்கமைவாக(போட்டிகளை மாற்றி அமைக்கவோ இரத்துச் செய்யவோ போட்டி ஒழுங்கமைப்பு குழுவிற்கு அதிகாரமுண்டு) யங்ஸ்ரார் கழகத்தினர் 786 கழகத்தினரை சுற்றுப்போட்டியிலிருந்து விலக்கி சுற்றுப்போட்டியின் வெற்றியாளர்கலாக எமது கழகமான மருதநிலா விளையாட்டு கழகத்தை அறிவித்திருந்தது
எனவே பரிசளிப்பு விழா நடைபெறும் நிகழ்வில் உதைபந்தாட்ட சுற்றுபோட்டிக்கு மட்டுமல்லாமல் யங்ஸ்ரார் கழகத்தினாரால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய விளையாட்டுகளுக்குமான பரிசளிப்புக்கள் இடம்பெறுவதனாலும் எமது கழகத்தினர் பரிசளிப்பில் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டோம் , வெற்றிக்கிண்ணத்தை நாம் பெற்றது தவறு என்றும் அதற்கு விளக்கம் தரவேண்டும் என்றும் சம்மேளனம் கடிதம் அனுப்பியிருந்தது ஆனால் குறித்த கடிதத்தில் விளக்கம் தரமுடியாத பட்சத்தில் எமது கழகம் எதிர்வரும் சுற்றுப்போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதுடன் சம்மேளனத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக நாம் போட்டிகளில் விளையாடவில்லை ஆனால் சம்மேளனத்தின் கடிதத்தில் கிண்ணத்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தால் நாம் அதையும் செய்திருக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டத்துடன்
தொடர்ந்தும் அவர்கள் கருத்து கூறுகையில்
இதிலும் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் வெற்றிக்கேடயத்தை பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரின் கையினாலேயே பெற்றுக் கொண்டோம் இப்பொழுது எமக்கு போட்டிக்கு தடை விதித்துள்ள சம்மேளனத்தின் செயலாளர் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களில் ஒருவர் என்பதே எமக்கு கவலைக்குறிய விடயமாக உள்ளது, அப்படி நாம் கிண்ணத்தை பெற்றது தவறு என்றால் சம்மேளனத்தின் செயலாளர் தம் பாராளுமன்ற உறுப்பினரிடம் கிண்ணத்தை வழங்கவேண்டாம் என்று தடுத்திருக்கலாமே… அல்லது குறித்த செயலாளரும் யங்ஸ்ரார் கழக உறுப்பினர் தான் எனவே தமது கழகத்திடம் குறித்த கிண்ணம் வழங்குவது தவறு என சுட்டிக்காட்டி தடுத்திருக்கலாம் தானே எனவும் தெரிவித்ததுடன்
இதற்கு முன்னமும் இவ்வாறான சம்பவம் வேறு இரு கழகங்களிற்கு இடையில் இடம்பெற்றிருந்தது என்றும் அதற்கும் மேற்கண்டவாறே தீர்மாணித்து வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டிருந்தது என்பதுடன் இதே சம்மேளன நிர்வாகமே அப்பொழுது அதை ஏற்றுக்கொண்டது என்றும் கிண்ணத்தை வழங்கிய யங்ஸ்ரார் அணி இச்சுற்றுபோட்டியில் விளையாட அனுமதித்த சம்மேளனம் கிண்ணத்தை வாங்கிய எமது கழகத்தை சுற்றுப்போட்டியிலிருந்து நீக்கியமை நீதிக்கு புறம்பான விடயம் என குற்றச்சாட்டை முன் வைத்தனர் மருதநிலா கழகத்தினர்
இது தொடர்பாக வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனதை நாம் வினவிய போது
தாம் மருதநிலா கழகத்தினரிடம் கோரிய விளக்கத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் எனவே இச்சுற்றுப்போட்டியிலிருந்து மாத்திரம் இக்கழகத்தினரை விலக்கியுள்ளதாகவும் பின்னர் சம்மேளனத்தின் நிர்வாகம் கூடி இதற்கான தீர்வை பெற்று எதிர்வரும் சுற்றுபோட்டிகளில் விளையாடுவது பற்றி தீர்மாணிக்கப்படும் என தெரிவித்தனர்
இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களால் எதற்காக கிண்ணத்தை வழங்கிய யங்ஸ்ரார் கழகத்தினரை இச்சுற்றுப்போட்டியில் விளையாட அனுமதித்தீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த சம்மேளனத்தினர்
யங்ஸ்ரார் கழகத்தினரிடமும் தாம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன் அவர்கள் தமக்கு விளக்கம் தராத பட்சத்தில் அவர்களும் இச்சுற்றுப்போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்
எதற்காக யங்ஸ்ரார் கழகத்திற்கு விளக்கம் கோரப்பட்டது? என எழுப்பப் பட்ட கேள்வியிற்கு
யங்ஸ்ரார் கழகத்தால் நடாத்தப்பட்ட மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் விதிமுறைகளில் முதலாவது விதியாக “போட்டிகள் யாவும் சர்வதேச மற்றும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்க விதிமுறைகளுக்கும் அமைவாகவே நடாத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்த விடத்தில் தம்மிடம் விளக்கம் கோராமலும் அறிவிக்காமலும் மருதநிலா கழகத்திற்கு கிண்ணத்தை வழங்கியமை தவறு என சுட்டிக்காட்டினர்
இது தொடர்பாக நாம் யங்ஸ்ரார் கழக தலைவரிடம் தொடர்புகொண்ட பொழுது
நடந்து முடிந்த மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எமது கழகத்தினரால் சுற்றுப்போட்டிக்கான சுற்றுப்போட்டி நிர்வாக குழுவின் மேற்பார்வையில் இடம்பெற்று வந்த வேளையில் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற 786 கழகத்தினர் சுற்றுப்போட்டி நிர்வாக குழுவின் மீது தாக்குதல் நடத்தியிருந்தது எனவே குறித்த சுற்றுப்போட்டியின் விதிமுறைகளில் 13வது விதிமுறையில் குறிப்பிட்டுள்ளவாறு ”போட்டிகளை மாற்றி அமைக்கவோ இரத்துச் செய்யவோ போட்டி ஒழுங்கமைப்பு குழுவிற்கு அதிகாரமுண்டு” என்ற அடிப்படையில் குறித்த 786 கழகத்தை சுற்றுப்போட்டியிலிருந்து நீக்கி நாம் இறுதி போட்டியிற்கு தெரிவான மருதநிலா கழகத்திற்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கியிருந்தோம் இதில் என்ன தவறு உள்ளது இதே சம்மேளன நிர்வாகத்தின் கீழ் இதற்கு முபொரு தடைவை இப்படியான சம்பவம் இடம்பெற்ற வேளை இவ்வாறே முடிவெடுக்கப்பட்டது எனவே சம்மேளனம் எம்மில் ஏன் தவறு என கூறுகிறது என்று விளங்கவில்லை என தெரிவித்ததுடன்
சம்மேளனத்தால் அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களுக்கும் தமது கழகத்தால் விளக்க கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்
எனவே வவுனியாவில் உள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சம்மேளனமும் இணைந்து செயற்பட்டால் நல்லதொரு விளையாட்டு வீரர்களை எமது சமூதாயம் பெற்றுக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை ஒரு சிலரின் தூண்டுதல்கள், தனிப்பட்ட பலிவாங்கல்கள் விளையாட்டிற்குள் ஊடுருவும் பொழுது சிறந்த வீரர்களை இழப்பதற்கு வழிவகுக்கும் என்பது எமது கடந்த கால வரலாற்றில் கண்டிருப்பீர்கள் எனவே சகல தரப்பினரும் ஒற்றுமையாக செயற்பட்டு எமது சமூகத்தில் சிறந்த ஒரு வீரர்களை உருவாக்க முன்வரவேண்டும் என்று சில ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்