வெலிகம பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்று தீப்பரவல் காரணமாக முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் முயற்சி செய்து வருவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.