கேகாலை மாவட்டம் மாவனல்லை, ஹெம்மாத்தகம பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
33 வயதான சாலிந்த குமார என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் மாவனல்லை பிரதேசத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக இந்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.