தமிழ் சிங்கள புத்தாண்டின் போது நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பில் எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தும் நேற்றைய தினம் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக பிரதமருக்கு பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
குறித்த முறைப்பாட்டை தொடர்ந்து பிரதமர் , மின்சார அமைச்சகத்திற்கு மற்றும் மின்சார சபை அதிகாரிகளுக்கு குறித்த மின்சாரத்தடை தொடர்பில் தமக்கு அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.