வெலிகம விகாரையில் தேரர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
36 வயதுடைய ஜபுரகொட தேரரே இவ்வாறு உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேச வாசிகளின் முறைப்பாட்டிற்கு அமைய தேரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
தேரரின் அறை கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படாமை குறித்து பிரதேச வாசிகளுக்கு எழுந்த சந்தேகத்தினால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன் பிரகாரம், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தேரரின் அறையை உடைத்த போதே தேரர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.