9 வது இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் 6வது போட்டி நேற்று இடம்பெற்றது.
சுரேஸ் ரைனா தலைமையிலான குஜராத் லயன்ஸ் மற்றும் மகேந்திரசிங் தோனி தலைமையிலான ரைஸிங் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில், குஜராத் லயன்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.
ராஜ்கோட்டில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரைஸிங் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்த குஜராத் லயன்ஸ் அணி 18 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.
இதனிடையே இன்று இடம்பெறவுள்ள தொடரின் 7வது போட்டியில் டெல்லி டெயர்டெவில்ஸ் அணியும்,கிங்ஸ் இளவன் பஞ்சாப் அணியும் பங்குகொள்ளவுள்ளன.